எம்ஏசிசி விசாரணையில் மித்ரா?

Malaysia, News

 185 total views,  1 views today

கோலாலம்பூர்,அக்.16-

மலேசிய இந்திய சமூக பொருளாதார உருமாற்றப் பிரிவான மித்ராவில் நிதி மோசடி நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் புகார்கள் தொடர்பில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் Gen Z இளைஞர் தலைவரால் புத்ராஜெயா எம்ஏசிசி தலைமையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரை எம்ஏசிசி ஆராய்ந்து மதிப்பாய்வு செய்யும் என்று எம்ஏசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், முறைகேடு ஆகியவை நிகழ்ந்துள்ளதா என்பதை கண்டறிய மானியம் பெற்ற சங்கங்கள், தனிநபர்கள், நிறுவனங்கள் ஒப்புதல் செயல்முறை, செலவுகள் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும் என எம்ஏசிசி கூறியுள்ளது.

இன்னும் பல செய்திகளுக்கு…

Leave a Reply