எம்ஐவி அரசியல் கட்சி கிடையாது ! – பாப்ப ராய்டு திட்டவட்டம்

Malaysia, News, Politics

 71 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம் – 25 ஆகஸ்டு 2022

நம்பிக்கைக் கூட்டணிக்கு வலுவான ஆதரவை வழங்கி வரும் மலேசிய இந்தியர் குரல் இயக்கம் (எம்ஐவி) என்றும் அரசு சாரா இயக்கமாக செயல்படுமே தவிர ஒருபோதும் அரசியல் கட்சியாக உருவெடுக்காது என்று அதன் தேசியத் தலைவர் வீ. பாப்ப ராய்டு தெரிவித்தார்.

2007இல் நடைபெற்ற இந்தியர்களின் எழுச்சிப் போராட்டமாக அமைந்த ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் மறு அவதாரமாக மலேசிய இந்தியர் குரல் திகழ்கிறது.

ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்கு பின்னர் பலர் சுயநலநோக்கோடு செயல்பட்ட போதிலும் மலேசிய இந்தியர் குரல் மட்டுமே ஹிண்ட்ராஃபின் கொள்கைகளை தற்போது வரையிலும் முன்னெடுத்து வருகிறது.

அம்னோ – தேசிய முன்னணியே நமது முதன்மை எதிரி எனும் நிலையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆதரவாக மலேசிய இந்தியர் குரல் செயல்படுகிறது.

அதன் அடிப்படையிலேயே நாடு தழுவிய நிலையில் பிஎச் இந்தியர் ஆதரவு பேரணி நடத்தப்படுகிறது.

வரும் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கோலசிலாங்கூர், இன்பென்ஸ் கல்லூரி வளாகத்தில் இந்தியர் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், மூடா கட்சி தலைவர் சைட் சித்திக் உட்பட பலர் பங்கேற்கவிருப்பதாக பாப்ப ராய்டு தெரிவித்தார்.

Leave a Reply