எலும்பு கூடாய் கண்டெடுக்கப்பட்ட மலேசியர் ஒரு வருடத்திற்கு முன்பே கொல்லப்பட்டிருக்கலாம்

Crime, Malaysia, News

 535 total views,  4 views today

கோலாலம்பூர்-

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ்-இல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு மலேசிய ஆடவருடையதாக இருக்கலாம் என நம்பப்படும் நிலையில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் மேற்கொண்ட உடற்கூராய்வில் அவ்வாடவர் ஒரு வருடத்திற்கு முன்னரே கொல்லப்பட்டிருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் தெரிவித்தது.
மரணமடைந்த அவ்வாடவர் சரவாக்கைச் சேர்ந்த 25 வயதான ஜாக்கி சோங் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு துறையின் இயக்குனர் அயோப் கான் மைடின் உள்ளூர் ஊடகங்களின் அறிக்கையை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தினார்.
2016 2நவம்பரில் சுற்றுலா விசாவை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த அவ்வாடவன், போதைப்பொருள் தொடர்புடைய வெளிநாட்டு கும்பலின் மூலம் தோட்டத் தொழிலாளியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அதிகாரிகளால் இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும், ஏதேனும் முன்னேற்றங்கள் இருந்தால் மலேசிய காவல்துறைக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன் தொடர்பில் தேவையற்ற ஊகங்களை பகிர்ந்து சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் சொன்னார்.

Leave a Reply