எஸ்பிஎஸ் திட்டத்தில் இணைய சுய தொழிலாளார்கள் ஊக்குவிக்க பரிந்துரை

Uncategorized

 164 total views,  3 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்,அக்.29-

சுயத் தொழிலில் ஈடுபடுபவர்கள் சமூக பாதுகாப்பு வாரியத்தில் (சொக்சோ)  பதிவு செய்யப்படுவது அவசியமாக்கப்பட வேண்டும் எனும்  பரிந்துரை நிதியமைச்சிடம் முன்மொழிந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இன்று பலர் சுயத் தொழிலில் ஈடுபடுவதையே விரும்புகின்றனர். ஆனால் சுயத் தொழிலில் ஈடுபடும் பெரும்பாலானோர் சொக்சோ சந்தாரராக பதிந்துக் கொண்டது கிடையாது.

இதனால் விபத்தில் சிக்கும் பெரும்பாலானோருக்கு சொக்சோ உதவிநிதி கிடைக்காமல் பலர் அவதியுறும் நிலையில் மக்கள் நலனை முன்னிறுத்தி சுயத் தொழில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் (எஸ்பிஎஸ்) அனைவரும் இணைவதை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் 2022இல் சொக்சோ சம்பந்தப்பட்ட பரிந்துரையை அங்கீகரிக்குமாறு கோரியுள்ளோம் என்று டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

சுயத் தொழில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைபவர்களுக்கு முதலாண்டில் 70% சந்தா நிதியை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் வகையிலான பரிந்துரையை மனிதவள அமைச்சு முன்மொழிந்துள்ளதாக  பிரீக்பீல்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் சொன்னார்.

சுயத் தொழில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் சந்தாதாரராக இணைவோர் மாதம் ஒன்றுக்கு வெ.13.10 சென்னும், வருடத்திற்கு வெ.157.20 சென்னும் செலுத்த வேண்டும்.

இவ்வாண்டு அக்டோபர் 22ஆம் தேதி வரை 340,620 பேர் சுயத் தொழில் சமூக  பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் பதிந்துக் கொண்டுள்ளனர்.

இன்று 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

Leave a Reply