ஏகே 61 கெட்டப்பில் குடும்பத்துடன் அஜித்

Cinema, News

 340 total views,  1 views today

சென்னை-

ஏகே 61 கெட்அப்பில் தனது குடும்பத்துடன் அஜித் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் டிரெண்டிங்காக இணையத்தை கலக்கி வருகின்றன. அஜித்தின் மாஸான லுக்கை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, புகழ்ந்து வருகின்றனர்.


ஏகே 61 படத்தில் அஜித் நடிக்கும் நெடிவ் ரோலிற்கான நெகடிவ் இமேஜை சமீபத்தில் போனி கபூர் வெளியிட்டிருந்தார். கண்ணாடி, நீண்ட வெள்ளை தாடி என அஜித் காட்சி அளிக்கிறார். இதே கெட்அப்பில் காதில் சிறிய வளையத்துடன் சமீபத்தில் சென்னையில் ஓட்டல் ஒன்றிற்கு அஜித் வந்திருந்த போட்டோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

ஐ சேனல் செய்திகள் 2/3/2022

அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அஜித், தனது குடும்பத்துடன் ஓட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அஜித்தின் வித்தியாசமான லுக், அசத்தலான வில்லத்தனத்திற்கான ஹேர் ஸ்டைல் ஆகியன அனைவரையும் கவர்ந்து வருகிறது.


நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின்னர் ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தில் அஜித், ஹீரோ-வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார். இந்த படத்திற்கும் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்க போகிறாராம்.

பிற செய்திகள்

Leave a Reply