
ஏப்பிரல் 25 : உலக மலேரியா நாள்
448 total views, 2 views today
கோலாலம்பூர் – 25 ஏப்பிரல் 2022
அனைத்துலக நிலையில் உலக மலேசியா நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்பிரல் 25 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளில் மலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான உலக முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
உலக சுகாதார அமைப்பான WHO – World Health Organization – இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
உலக மலேரியா நாளானது 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் உலக சுகாதார அமைப்பின் 60வது கூட்டத்தின்போது உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருபொருளுடன் இந்த உலக மலேரியா நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், 2022 இவ்வாண்டின் கருபொருளாக மலேரியா நோயின் சுமையைக் குறைக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் எனும் கருபொருளின் கடைபிடிக்கப்படுகிறது.