ஏப்.1 முதல் அனைத்துலக எல்லைகள் திறக்கப்படும்- பிரதமர்

Malaysia, News

 295 total views,  3 views today

கோலாலம்பூர்-

கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட அனைத்துலக எல்லைகள் திறக்கப்படும் பட்சத்தில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பும் மலேசியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கும் நிலையில் இனி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
எனினும் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன் இரு தினங்களுக்கு முன்பாக RT-PCR சோதனை மேற்கொள்வதோடு, நாட்டிற்குள் வரும் பயணிகள் RTK சுய கோவிட் பரிசோதனையை செய்ய வேண்டும்.
மலேசியர்கள் தனது அனைத்துலக எல்லையை திறந்திருக்கும் நாடுகளுக்கு மை செஜாத்ரா தடுப்பூசிக்கான சான்றிதழை கொண்டு பயணிக்க முடியும் எனவும் தனது எல்லைகளை திறக்காத நாடுகளுடன் VTL திட்டத்தின் கீழ் பயணம் செய்யலாம் என்றும் டத்தோஶ்ரீ இஸ்மாயில் கூறினார்.
சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் மலேசியா VTL பயணத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply