ஏப்.13இல் ‘பீஸ்ட்’ வெளியீடு

India, News

 210 total views,  1 views today

சென்னை-

‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply