ஏப்.2இல் வெளியாகிறது ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்

Cinema, Health, News

 184 total views,  1 views today

சென்னை-

‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ’
’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன.
‘பீஸ்ட்’ வெளியாக இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் டீசரையும் ட்ரெய்லரைம் காண வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். அதற்கு காரணம், விஜய் படம் என்பது மட்டுமல்ல… கொரோனா சூழலிலும் சூப்பர் ஹிட் கொடுத்து மக்களை தியேட்டர் வரவைத்த நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் என்பதாலும்தான். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ இரண்டுமே சூப்பர் ஹிட் அடித்ததால் ஹாட்ரிக் வெற்றிக் கொடுப்பாரா நெல்சன் திலீப்குமார் என்று ரசிகர்கள் உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறார்கள். https://www.youtube.com/watch?v=hMSPwpDG20c

Leave a Reply