ஏழைகளுக்கான வீடுகள், ஆனால் பணக்காரர்கள் பயன்பெறுகிறார்களா ?

Economy, Local, Malaysia, News

 190 total views,  2 views today

கோலாலம்பூர் – 3 ஆகஸ்டு 2022

ஏழை மக்களுக்காக குறைந்த விலை வீடுகளை அரசாங்கம் உருவாக்கியிருந்தாலும்கூட, அதனைத் தங்களின் சுயநல இலாபத்திற்காக தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் அரங்கஏறி வருகின்றன.

அரசு முடிவு செய்த வாங்குவதற்கு ஏற்ற விலையில் இருந்து இரண்டு மடங்கு வரையில் விலை கொடுத்து மிக விரைவாக சில வசதியுள்ளத் தரப்பினரால் வாங்கப்படுகின்றன. அதனால், பி40 தரப்பினரால் அந்த வீடுகளை வாங்க முடியாமல் போகும் நிலை ஏற்படுகின்றது.

குறிப்பாக, இரண்டாம் நிலை சந்தையிலும் ஏலச் சந்தையிலும் இது வழக்கமான ஒன்ற் என PropertyGuru நிறுவனத்தின் தகவல் பிரிவு தலைமை நிர்வாகி ஜோ தோர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்தையில் வீடுகளை வாங்குறவர்களில் குறைந்தது 30 விழுக்காட்டினர் முதலீட்டாளஎகள் எனக் கணித்துள்ளார்.

ஏலச் சந்தையில், பெரும்பான்மையினர் முதலீட்டாளர்கள். அவர்களில் பலர் ஒரு சில குறைந்தவிலை சொத்தை வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கக் கூடும். பின்னர் அதனை அதிக விலைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் சட்டத்திற்குப் புறம்பாக மலேசியாவுக்குள் புகுந்துள்ள வெளிநாட்டுவாசிகளுக்கும் வாடகைக்கு விடப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இதனால், வழக்கமான திறந்த சந்தையில் மலேசியர்களுக்கான வீடுகள் ‘சிக்கிக் கொள்கின்றன’.

நடுத்தர – குறைந்த விலை வீடுகள் விற்கப்பட்ட 35 ஆண்டுகளில் 220% முதல் 230% வரையில் விலை அதிகரிப்பதாக PropertyGuru இணையத்தளம் குறிப்பிடுகிறது.

இந்த அளவுக்கு அது விலை அதிகரிக்கக் காரணம் அரசாங்க அந்த வீடுகளுக்கு வழங்கியுள்ள உதவித் தொகை / மானியமாகும்.

உதவித் தொகை கொண்ட வீடுகள் விற்பனையை 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது. இது திறந்த சந்தைக்குச் சென்ற பிறகு 20 ஆண்டுகள் வீடுகள் 95% வரையில் விலை அதிகரிக்கக் கூடும்,

இந்த விவகாரம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு ரொக்கமாக ஒரே தவணையில் பணத்தைக் கொடுத்து அந்த வீடுகள் வாங்கப்படுகின்றன.

அதே சமயம், குறைந்த விலை வீடுகளை வாங்கி அதிகம் பலனடைவது பணக்காரர்கள் எனும் கருத்தை ஆதரிக்கிறார் மலேசியப் பொருளாதார ஆய்வு மையத்தின்மூத்த ஆய்வாளர் சங்கரம் நம்பியார்.

இந்த நிலை தொடர்ந்தால் விலை குறைந்த வீடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் எனவும் அவர் சொன்னார்.

பினாங்கு, கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களல் ஏலத்திற்காகப் பட்டியலிடப்பட்ட குறைந்த விலை வீடுகள் பல வாங்கப்பட்டு விட்டதாகவும் அதனை வாங்கியவர்கள் பி40 தரப்பினரைச் சேர்ந்தார்கள் இல்லை என  ஏலம் விடும் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

சொத்துகள் ஏலத் துறையில் பணிபுரியும் தரகர்களிடம் திரட்டப்பட்டத் தகவலின்படி, வாடகைக்கு விடப்படுவதற்காகவே பல முதலீட்டு நிறுவனங்கள் குறைந்த விலை வீடுகளை வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

Selangorku வீடுகள், Rumawip குறைந்த விலை வீடுகள் ஆகியவைகூட பொதுச் சந்தையில் விற்கப்படுவதும் தெரிய வந்துள்ளது

பொது ஏலத்தில் இது போன்ற வீடுகள் விற்கப்படுவதற்கு எந்தவித தடையும் இல்லை என சிலாங்கூர் வீடுகல் – சொத்துடைமை வாரியத்தின் செயல்முறை இயக்குநர்  ஜுஹாரி அகமாட் அளித்த எழுத்துப்பூர்வமான பதில் உறுதிப்படுத்துகிறது.

இருந்தபோதிலும், விலைக் கட்டுப்பாட்டையும் கண்காணிக்கும் நிறுவனம் எனும் அடிப்படையில் குறைந்த விலை வீடுகள் சொத்துடைமை நிறுவனங்களால் வாங்கப்பட்டு மீண்டும் பொதுச் சந்தையில் விற்கப்படும்போது அது பொது மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply