ஐக்கிய அரபு நாட்டில் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பு கலந்தாலோசிக்கப்படும் – டத்தோஶ்ரீ சரவணன்

Malaysia, News

 374 total views,  2 views today

துபாய், அக்.23-

ஐக்கிய அரபு அமீரகத்தில்  அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் அந்நாட்டு மனிதவள அமைச்சருடன் கலந்து பேசப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

தற்போது 6,000 மலேசியர்கள் அந்நாட்டில் பெட்ரோலியம், சுகாதாரத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம், துபாயில்  அந்நாட்டு மனிதவள அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்துல் மன்னான் அல் அவாரை மரியாதை நிமித்தம் சந்தித்த டத்தோஶ்ரீ சரவணன், சில முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக சொன்னார்.

E-Paper வடிவில் செய்திகளை படிக்க கீழே அழுத்தவும்…

இந்த சந்திப்பில் ஐக்கிய அரபு சிற்றரசில் செயல்படுத்தப்படும் தொழிலாளர் சம்பள முறை குறித்து  தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இது மலேசியாவில் உள்ள அந்நியத் தொழிலாளர்களின் சம்பள முறையை  மேம்படுத்துவதற்கு வழிகாட்டுதலாக அமையும்.

இருவழி ஒத்துழைப்பின் மூலமாக நிபுணத்துவம், உயர் ஆற்றல் கொண்ட  தொழில்துறைகளில் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பில், இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேசவிருப்பதாக கூறினார்.

Leave a Reply