ஐவருக்கு ‘ஆசிரியர் திலகம்’ விருது, 3 தமிழ்ப்பள்ளிகளுக்கு பாராட்டு

Uncategorized

 204 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்,டிச.4-

சிலாங்கூர் மாநில அரசின் 2019ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டும் விழா நேற்று முதல் தொடங்கியது.


இதன் முதல் நாள் தொடக்க விழாவில் தமிழ்ப்பள்ளிகளில் சிறந்த முறையில் சேவையாற்றி பணி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமையாசிரியர்களுக்கு ‘ஆசிரியர் திலகம்’ வழங்கி கெளரவிக்கும் நிகழ்வும் சிறந்த தமிழ்ப்பள்ளிகளுக்கான பாராட்டு நிகழ்வும் சிறப்பாக நடந்தேறியது.


ஆசிரியர் திலகம் விருதை பாலசுந்தரம் லெட்சுமணன், செல்லையா பழனி, திருமதி சந்திராதேவி கேசவன், முனைவர் ராமசாமி ரிச்சர்ட் சாமி, அமரர் பச்சையப்பன் பொன்னுசாமி (பிரதிநிதியாக அவரின் புதல்வர் பெற்றுக் கொண்டார்) ஆகியோர் பெற்றுக் கொண்ட நிலையில் சிறந்த தமிழ்ப்பள்ளிகளாக முதல்நிலையில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியும், இரண்டாம் நிலையில் காஜாங் தமிழ்ப்பள்ளியும் மூன்றாம் நிலையில் பூச்சோங் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடின.


மூன்று நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் முதல்நாள் நிகழ்வில் கணபதிராவுடன் மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஃபக்ருல்ரஸி பின் முகமட் மொக்தார், ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி பின் அபுபக்கார், போர்ட்கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் பின் ஸமான் ஹூரி, UPEN துணை இயக்குனர், இந்திய சமூகத் தலைவர்கள், பொது இயக்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply