‘ஐ-சீட்’இடம் மித்ரா தோற்றுபோகும் – கணபதிராவ் சாடல்

Malaysia, News, Politics

 79 total views,  1 views today

ரா.தங்கமணி

மத்திய அரசாங்கத்திடமிருந்து வெ.100 மில்லியன் பெறும் மித்ராவை விட சிலாங்கூர் மாநில அரசிடமிருந்து வெ.1.3 மில்லியனை பெறும் ஐ-சீட் திட்டம் வெற்றியை பதிவு செய்துள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயம் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண இன்னமும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசாங்கம் வெ.100 மில்லியன் நிதியை மித்ராவுக்கு ஒதுக்கீடாக வழங்கி வருகிறது.

வெ.100 மில்லியனை பெற்ற போதிலும் எத்தனை இந்தியர்கள் அத்திட்டத்தினால் பயனடைந்தனர் என்ற கணக்கு காட்ட முடிவதில்லை

ஆனால், ஆண்டுக்கு வெ.1.3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 254 இந்திய சிறு தொழில் வணிகர்கள் தங்களது வர்த்தகத்தில் முன்னேற்றம் காண வர்த்தகப் பொருளுதவிகளை வழங்கி உதவியுள்ளது ஐ-சீட் பிரிவு.

ஐ-சீட் திட்டத்தின் வழி பொருளுதவி பெற்று பனயடைந்த வணிகர்களை கொண்டு இலவசமாக கூடாரங்கள் வழங்கி தீபாவளிச் சந்தை நடத்தப்படுகிறது.

ஐ-சீட் படைத்துள்ள இதுபோன்ற வெற்றியை மித்ராகூட இன்னும் சாதித்ததில்லை என்னு இங்குள்ள டத்தாரான் செட்டியில் நடைபெற்ற ஐ-சீட் தீபாவளிச் சந்தை நிறைவு விழாவில் உரையாற்றியபோது கணபதிராவ் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி உட்பட பலர் வருகை புரிந்தனர்.

Leave a Reply