
ஐ-சீட் அமைப்பின் வழி உதவிப் பொருட்கள் கையளிப்பு
378 total views, 1 views today
உலு லங்காட்-
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் தலைமையின் கீழ் செயல்படும் ஐ-சீட் (I-SEED)அமைப்பின் கீழ் இந்திய சிறு தொழில் வணிகரான திருமதி சந்திரகலா சுப்பிரமணியத்திடம் துணி தைக்கும் இயந்திரம் கையளிக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில அரசின் உதவித் திட்டமான இதில் இந்திய சிறு வணிகர்களுக்கு உதவிடும் வகையில் பொருளுதவிகள் வழங்கப்படுவதே ஐ-சீட் அமைப்பின் முதன்மை நோக்கமாகும். அதன் அடிப்படையில் துணி தைக்கும் இயந்திரத்தை கோரியிருந்த திருமதி சந்திரகலாவுக்கு இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் வெ.6,400.00 மதிப்பிலான தொழில் முறை துணி தைக்கும் இயந்திரம், நீராவி பெட்டி வழங்கப்பட்டது என்று ஐ-சீட் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டிக்கம் லூர்டஸ் தெரிவித்தார்.
இந்த உதவிப் பொருட்களுக்கான பொருட்களை அந்தந்த மாவட்ட நில அலுவகலமே வாங்கி கொடுக்கும் நிலையில் பொருட்கள் தயாரானதும் சம்பந்தப்பட்டவர்களிடம் பொருட்கள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
பொருளுதவியைப் பெற்றுக் கொண்ட திருமதி சந்திரகலா YB கணபதிராவுக்கும், ஐ-சீட் அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த பொருளுதவி வழங்கும் நிகழ்வில் YB கணபதிராவின் முதன்மை அதிகாரி ஆனந்த், சிறப்பு அதிகாரி குமாரி யோகேஸ்வரி, உலு லங்காட் மாவட்ட ஐ-சீட் அதிகாரி குகநாதன், ஐ-சீட் அதிகாரிகள், இந்திய கிராமத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.