
ஐ சேனலின் இனிய 2054 தமிழ்ப்புத்தாண்டு – பொங்கல் திருநாள் வாழ்த்துகள் !
28 total views, 1 views today
தைத்திங்கள் தலைநாள்
தமிழுழவர் ஒளிநாள்
தமிழ்மக்கள் பெருநாள்
தமிழ்ப்புத்தாண்டுத் திருநாள்
தென்திசை ஓய்ந்த கதிரவன்
வெற்றித் திலகம்போல்
வடதிசை நகரும் நன்னாள்
நெல்லுக்கும் உழவர்க்கும்
மடிதரும் நிலம்
உயிர்தரும் நீர்
மூச்சுதரும் காற்று
ஒளிதரும் சூரியன்
மழைதரும் ஆகாயம் என்ற
ஐம்பூதங்களுக்கும்
நன்றியோடு விழா எடுக்கும் பொன்னாள்
வரப்புகளில் விளையாடி
வயலுக்குள் வாழ்ந்து
வளர்ந்த நெற்கதிர்களை
வெண்மணி அரிசியாக்கி
புத்தம்புதுப் பானையில்
பாலும் சர்க்கரையும்
பாகும் பருப்புமிட்டுப் பொங்கி
மஞ்சளும் இஞ்சியும்
கரும்பும் கற்கண்டும் கூட்டி
நிலத்தை முத்தமிட்டுச்
சூரியனை வாழ்த்தி
உழவர்தம் உயிர் நெகிழும்
பொங்கல் நாள்
ஐ சேனலின்
இனிய 2054 தமிழ்ப்புத்தாண்டு
பொங்கல் திருநாள் வாழ்த்துகள் !
எழுத்து : புகாரி