ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம்

Malaysia, News

 260 total views,  2 views today

கோலாலம்பூர்-

ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நாடு தழுவிய நிலையில் பல மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது.
வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்று மேலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் காலை 11.00 மணியளவில் மருத்துவர்களின் போராட்டம் நடத்தப்பட்டது.
வேலை உத்தரவாதமும் வேலை வாய்ப்புகளும் தரப்பட வேண்டும் என்று ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டத்தை கையிலெடுத்தனர்.
கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை, கிள்ளான் மருத்துவமனை, மெப்ஸ் கோவிட்-19 நோயாளி பராமரிப்பு மையம் ஆகிய இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply