ஒருதலை பட்ச மதமாற்றம் : லோவின் சீராய்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி !

Malaysia, News

 111 total views,  1 views today

கோலாலம்பூர் – 1 ஆகஸ்டு 2022

தனது மூன்று பிள்ளைகள் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதால் அதன் தொடர்பில் தனித்து வாழும் தாயாரான லோ செய்த சீராய்வு விண்ணப்பத்திற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தனது முன்னாள் கணவர் முகம்மட் நாகேஸ்வரன் முனியாண்டி 3 பிள்ளைகளையும் ஒரு தலைபட்சமாக மதம் மாற்றியதைத் தொடர்ந்து அதனை எதிர்த்து வழக்கு தொடுக்க லோ மேற்கொண்ட விண்ணப்பத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தாயார் லோவுக்குத் தெரியாமல் 3 குழந்தைகளைக் கடத்திச் சென்று நாகேஸ்வரன் மதம் மாற்றம் செய்ததாக லோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்த மேல்முறையீட்டுக்கானத் திகதியை நீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது.

தமது மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் உரிமையை கடந்த திசம்பர் மாதம் சிவில் நீதிமன்றம் கோவுக்கு வழங்கியது

இயங்கலை வழி நடந்த அந்த வழக்கு விசாரணையில், மதமாற்றம் விவகாரத்தை எதிர்த்து வழக்கு தொடுக்க விண்ணப்பம் செய்ய இவ்வாண்டு மார்ச் மாதம் 23 ஆம் நாள் வரையில் லோவுக்கு கால அவகாசத்தை வழங்கினார் நீதிபதி வான் அகமாட் ஃபாரிட் வான் சால்லே.

பிள்ளைகள் மூவரின் மத மாற்றம் குறித்த உறுதிப்பாட்டை லோ இவ்வாண்டு 4 ஆம் தேதிதான் லோன் பெற்றார். அன்றைய நாளில் இருந்து 3 மாத கால அவசாகம் தொடங்கியது. 2020 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் லோவின் 3 பிள்ளைகளும் மதமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் தமது தரப்புக்கு அவ்விவகாரம் இவ்வாண்டு மார்ச் மாதமே உறுதிப்படுத்தப்பட்டதால் தேசிய வழக்கறிஞர் அலுவலகம் அந்த விண்ணப்பத்தை எதிர்க்கவில்லை.

லோவின் தரப்பில் ஶ்ரீமுருகன், ஷம்ஷேர் சிங் ஆகிய வழக்கறிஞர்களும் அரசு தரப்பில் இருந்து அகமாட் ஹனிர் ஹம்பாலி @ அர்வியும் இந்த வழக்கில் வாதாட முன்வருகின்றனர்.

அதே சமயம், பெர்லிஸ் மாநில இசுலாம் சமய – மலாய் சடங்கு மன்றத்தின் சார்பில் முகம்மட் ஹனிஃப் கத்ரி அப்துல்லா, ஸைனுல் ரிஜால் அபு பக்கார் ஆகியோரும் களம் புக உள்ளனர்.

மேலும் , கடந்த பிப்பரவரி 21 ஆம் நாள் லோ பதிவு செய்த habeas corpus விண்ணப்பத்திற்கு வழிவிட்டு தாயாரையும் பிள்ளைகளும் சந்திக்க நீதிமன்றம் வழி வகை செய்தது.

ஒரு மாதத்திற்குப் பிறகு, தமது பிள்ளைகளின் மதமாற்றத்தை எதிர்த்து லோ வழக்குப் பதிவு செய்தார்.

அதன்படி, பெர்லிஸ் மாநில இசுலாமிய சமயப் பதிவாளர், பெர்லிஸ் மாநில இசுலாமிய சமய மன்றம், பெர்லிஸ் மாநில முஃப்தி முகம்மட் அஸ்ரி ஸைனுல் அபிடின், பெர்லிஸ் மாநில அரசு ஆகியோர் மீது இந்த வழக்கை 34 வயதான லோ தொடுத்துள்ளார்.

கடந்த 7-7-2020 ஆம் நாள் பெர்லிஸ் மாநில இசுலாமிய சமயப் பதிவாளர் வெளியிட்ட தமது பிள்ளைகளுக்கு நடந்த மதமாற்றப் பதிவை அகற்றக் கோரி இருந்தார் லோ.

அதே சமயம், தமது பிள்ளைகளின் சமயத்தை மாற்ற நாகேஸ்வரனுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் எனவும் அந்த விண்ணப்பத்தில் லோ குறிப்பிட்டிருந்தார்.

பெர்லிஸ் மாநிலச் சட்டப்படி, வயது குறைந்த ஒரு பிள்ளையின் மதத்தை அல்லது சமயத்தை தாயோ அல்லது தந்தையோ மாற்றம் வழி வகை செய்கிறது. மற்றொருவரின் அனுமதி அவசியமில்லை. இது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கின்றது எனவும் லோ குறிப்பிட்டடிருந்தார்.

மேலும், தமது 10 வயது ஆண் மகனையுன், இரட்டைக் குழந்தைகளான 13 வயது பெண் பிள்ளைகளையும் இந்து எனவும் அறிவிக்க வேண்டும் எனவும் லோ உறுதியாகக் கூறி இருந்தார்.

Leave a Reply