ஒரு பக்கம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் ! மறுபக்கம் பி40 மாணவர்களுக்கு உதவிக்கரம் ! – யூஎஸ்எம்-இன் இந்தியப் பண்பாட்டு அமைப்பு !

Education, Indian Student, Malaysia, Malaysia, News

 98 total views,  2 views today

பினாங்கு – 19 ஆகஸ்டு 2022

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் எயல்பட்டு வரும் இந்தியர் பண்பாட்டு அமைப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 17 வகையான  வெவ்வேறு இந்தியப் பண்பாட்டு கலைப் படைப்புகளை தொடர்ந்து மேலையில் நிகழ்த்தி இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர்.

30 வது அனேக்காராகாம் எனும் கலை இரவு நிகழ்ச்சி துவான்கு ஷேட் புத்ரா மண்டபத்தில் அரங்கேறியது.

பரதநாட்டியம், புலியாட்டம், மயிலாட்டம், சிலம்பம் போன்ற கலைப் படைப்புகளை மேடையில் நிகழ்த்தி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர் அவ்வமைப்பினர்.

சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதோடு, செவி, பார்வை பிரச்சனை உள்ள பி40 இந்திய மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்நிகழ்ச்சி வழி நிதியும் திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி வழி ரிம 15,430 நிதி திரட்டப்பட்டு 15 கண் கண்ணாடிகளும் 2 செவிக் கருவிகளும் வாங்கப் பயன்படுத்த உள்ளதாக அவ்வமைப்பினர் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

https://www.instagram.com/p/ChHfulklBJS/?utm_source=ig_embed&ig_rid=9b8920f0-619d-4b66-9c14-e2c15651424d

இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறவும் எடுத்த நோக்கம் நிறைவடையவும் உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.

இந்த உன்னத நோக்கத்திற்குக் கைகொடுத்த அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி” என அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் துணைத் தலைவர் நாகேந்திரராவ் சிவராம் தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு ஐ சேனலின் வாழ்த்துகள் !

Leave a Reply