ஒரு வினாடிகூட தாமதப்படுத்தாமல் நாடாளுமன்றம் கலைக்கப்படும்- பிரதமர்

Malaysia, News, Politics

 505 total views,  2 views today

கோலாலம்பூர்-

தேசிய முன்னணி தயாரானவுடன் பொதுத் தேர்தல் நடத்துவதில் ஒருவினாடி கூட தாமதப்படுத்தப்படாது. இப்போதிருந்து எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கு தயாராகும்படி தேசிய முன்னணியை கேட்டுக் கொண்ட பிரதமர், அதில் நாம் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

தேசிய முன்னணி தயாரானவுடன் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதோடு தேர்தல் தேதி குறித்து  தேமு தலைவர்கள், அம்னோ உயர்மட்ட தலைவர்களுடன் தாம் விவாதிக்கப்போவதாக தேசிய முன்னணியின் 48ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு 4,000 பேர் முன்னிலையில் உரையாற்றுகையில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி இதனை தெரிவித்தார்.

Leave a Reply