
ஒற்றுமையாக இருந்து, வருவதை எதிர்கொள்வோம் ! – விடுதலை நாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் சரவணன்
183 total views, 1 views today
கோலாலம்பூர் – 31 ஆகஸ்டு 2022
மலேசியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த 65ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவில் மட்டுமன்றி, மலேசியர்கள் எனும் அடையாளத்துடன் உலகின் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் இவ்வேளையில் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
நம்மிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற பிணைப்பு நிலைத்திருக்க வேண்டும். மலேசியக் குடும்பமாக, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வோடு ஒன்று பட்டு வாழ்வோம். தொற்று காலத்திலும், பேரிடர் காலங்களிலும் இனம், மொழி, மதங்களைக் கடந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டது போல இனி வரும் காலங்களிலும் ஒற்றுமையாக இருந்து, வருவதை எதிர்கொள்வோம். மலேசியாவிற்குச் சுதந்திரம் வாங்கியதில் பல்லின மக்களின் ஒற்றுமையும் ஒரு முக்கிய கூறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒற்றுமையாய் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
அதே வேளையில் இந்தியர்கள் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நமக்கான தேவைகளைக் கேட்டுப் பெற முடியும். “ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பதுபோல நாம் பிளவுபட்டு இருந்தால் நமக்குதான் நஷ்டம். எனவே தெளிவான சிந்தனையுடன் சிந்திப்போம், செயல்படுவோம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
மெர்டேக்கா மெர்டேக்கா மெர்டேக்கா
சுதந்திர தின வாழ்த்துகளுடன்,
மக்கள் நலன்பேணும் மனிதவள அமைச்சு!
உங்கள் நலன்பேணும் உங்களில் ஒருவன்!
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்