ஓர் உள்ளூர் தொழிலாளிக்கு மாற்றாக 10 அந்நியத் தொழிலாளர்கள் – பிரெஸ்மா பரிந்துரை

Malaysia, News

 130 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தொழிலாளர் பற்றாக்குறையினால் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் உணவகத் தொழில் துறை புத்துயிர் பெறுவதற்குன் ஏதுவாக தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும் என்று மலேசிய  இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரெஸ்மா) தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹார் அலி கேட்டுக் கொண்டார்.

நாட்டிற்கு அதிக வருமானம் ஈட்டி தரும் தொழில்துறையாக உணவக தொழில்துறை திகழ்கிறது. ஆனால் தற்போது ஆள்பலப் பற்றாக்குறையினால் பல உணவகங்கள் மூடுவிழா கண்டு வருகிறது. நமது சங்கத்தில் 8,000 பேட்ர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 2,000 பேர் உணவக தொழிலை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

ஆள்பலப் பற்றாக்குறைக்கு தீர்வு காண காலியிடங்களுக்கு ஆட்களை நிரப்புவதே சிறந்ததாகும். உணவகத் துறையில் பணியாற்ற உள்ளூர்வாசிகள் ஆர்வம் காட்டுவதில்லை, அதே போன்று அந்நியத் தொழிலாலர்கள் தருவிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.

குறிப்பாக, உணவகத்தில் ஓர் உள்ளூர் தொழிலாளிக்கு மூன்று அந்நியத் தொழிலாளர்களை பணியமர்த்த அரசு அனுமதி வழங்குகிறது. அந்த மூன்று தொழிலாளிகளுக்கு மேல் பிறரை வேலைக்கு எடுக்க முடியாது.இதனால் ஆள்பலப் பற்றாக்குறையை வெகுவாக எதிர்கொண்டு வருகிறோம்.

இதற்கு தீர்வாக ஓர் உள்ளூர் தொழிலாளிக்கு 10 அந்நியத் தொழிலாளர்களை பணியமர்த்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.  அத்தகைய முடிவு எடுக்கப்படுமாயின் ஆள்பலப் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும் என்று டத்தோ ஜவஹார் அலி தெரிவித்தார்.

Leave a Reply