கட்சித் தாவல்களுக்கு எதிரான மசோதா  தாக்கல் பிஎச் கூட்டணிக்கே பிரச்சினை

Malaysia, News

 113 total views,  1 views today

கோலாலம்பூர்-

கட்சித் தாவல்களுக்கு எதிரான மசோதா  தாக்கல் செய்வதை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை பக்காத்தான் ஹராப்பானுக்கு  தடையாக உள்ளது, ஏனெனில் அதன் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சி கூட்டணியின் மீது நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று மலாயா பல்கலைக்கழக ஆய்வாளர் அவாங் அஸ்மான் பாவி கூறினார்.

கடந்த செப்டம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்ட அரசாங்கத்தின் மீது பிஎச் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் வரை, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிகேஆரின் அன்வார் இப்ராஹிம், லிம் குவான் எங் (டிஏபி), முகமது சாபு. (அமானா) மற்றும் வில்பிரட் மேடியஸ் டாங்காவ் (உப்கோ) ஆகிய தலைவர்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும், ”.

 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மக்களவை கூட்டத்திலும் கடந்த மாதம் முடிவடைந்த கூட்டத்திலும், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவையின் சிறப்பு கூட்டத்தில் இம்மசோதா தாக்கல் செய்யப்படுவது ஒத்திவைக்கப்படுவதாகவும் இதனை தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை எனவும் பிரதமர் துறை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜபார் தெரிவித்தார்.

Leave a Reply