கட்சி தாவலுக்கு எதிராக மசோதா ஏப்.11இல் தாக்கல்

Malaysia, News

 196 total views,  3 views today

கோலாலம்பூர்-

கட்சித் தாவல்களுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்வதற்கான சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

கூட்ட விதி 11 (3) மற்றும் சபாநாயகர் டான்ஸ்ரீ அசார் அஸிஸான் ஹருன் ஆகியோரின் அடிப்படையில், நாடாளுமன்றக் குழுவின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டதாக சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

மேலும், மசோதாவை விவாதிப்பதற்கான ஒரு நாள் அவகாசம் போதுமானதாக இல்லை என்றால், சிறப்பு மாநாட்டை நீட்டிக்கவும் பிரதமர் ஒப்புக்கொண்டதாக அவர் விளக்கினார்.

“மாண்புமிகு உறுப்பினர்களே, கவலைப்பட வேண்டாம்… இந்த மசோதாவை  தாக்கல் செய்ய  பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார், மேலும் இதை ஆதரிப்பதா? இல்லையா? என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களே முடிவு செய்வர் என்றும் அவர் சொன்னார்.

Leave a Reply