
கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்திற்கு செனட்டர்களும் கட்டுப்பட வேண்டும்
479 total views, 1 views today
கோலாலம்பூர்-
கட்சி தாவலை தடுக்கும் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட மேலவை உறுப்பினர்களும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மேலவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படுபவர்கள் என்பதால் அவர்களும் கட்சி தாவல் தடுப்பு சட்டத்திற்கு உட்பட்டவர்களே என்று மக்களவையில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டபோது பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பின நஸ்ரி அஸிஸ் தெரிவித்தார்.
அதேவேளையில் நிபுணத்துவம் மற்றும் சிறுபான்மையோரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படும் மேலவை உறுப்பினர்கள் கட்சி தாவலுக்க் எதிரான சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், அவர்கள் அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்படுவதில்லை என அவர் மேலும் சொன்னார்.