கட்சி தாவல் நடவடிக்கையை எஸ்பிஆர் எம் விசாரிக்க வேண்டும்

Uncategorized

 137 total views,  1 views today

கோலாலம்பூர்-

கட்சி தாவல் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுவதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
ஆளும் அரசாங்கத்தை ஆதரிக்கும் பொருட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்க பேரம் பேசப்படுகிறது.
வாட்ஸ்அப் குறுஞ்செய்தியின் மூலம் பேரம் பேசப்படுவதை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்பிஆர்எம் இவ்விவகாரத்தை கடுமையாக கருதி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹாராப்பான் தலைமைத்து மன்றம் சார்பில் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஜிம், ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply