கட்சி தாவல் மசோதாவை தாக்கல் செய்யுங்கள்; இல்லையேல் வீதியில் போராடுவோம்- மாட் சாபு

Malaysia, News, Politics

 202 total views,  2 views today

கோலாலம்பூர்-

கட்சி தாவல் தடை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதி போராட்டத்தில் களமிறங்குவோம் என்று கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு எச்சரித்தார்.
மக்களின் குரலை அரசாங்கம் ஒருபோதும் பொருட்படுத்தாதே ஆயிரக்கணக்கான மக்கள் வீதிப் போராட்டத்தில் களமிறங்க அழைப்பு விடுப்பதகற்கு முக்கிய காரணம் ஆகும்.

“கட்சி தாவல் தடைச் சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். கட்சித் தாவல் தடைச் சட்டம் இல்லையென்றால், வளமான ஜனநாயக நாடாளுமன்றத்தை எவ்வாறு நடத்த முடியும்?
“இதுதான் இப்போது மிகப்பெரிய தடையாக இருக்கிறது. கட்சித் தாவல் தடைச் சட்டம் இப்போது அல்லது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படாமல் இருந்திருந்தால், நானும் எனது நண்பர்களும் வீதிக்கு வந்து போராடுவோம்.
இதுவே எனது கடைசி எச்சரிக்கை என்று கூறிய முகமட் சாபு,ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு, மாநிலத் தேர்தல் நடத்தப்பட்டதில் அதிக விரயம் காணப்பட்டதே இதுவும் ஒரு காரணமாகும்.
“சபா மாநில தேர்தலில் வெ.130 மில்லியன் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே போன்று மலாக்கா மாநில தேர்தலில் 45 மில்லியன், ஜோகூர் மாநில தேர்தலில் வெ.96 மில்லியன் செலவிடப்பட்டது என்று அவர் சொன்னார்.

Leave a Reply