கட்டுப்பாடு இல்லாத உணவுகளால் மோசமானது ஜெயலலிதா உடல்நிலை- விசாரணை அறிக்கை

India, News, Politics

 253 total views,  1 views today

சென்னை-

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் ஜெயலலிதா என்னென்ன உணவு வகைகளை சாப்பிட்டார் என்ற விவரமும் இடம் பெற்றுள்ளது.


அந்த வகையில், ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவு பட்டியல் குறித்த தகவலும் விசாரணை ஆணையத்தில் இடம் பெற்றுள்ளது. அதன்படி, ஜெயலலிதாவுக்கு இட்லி, வெண்பொங்கல், தக்காளி சாதம், சாம்பார் சாதம் மிகச்சிறிய அளவில் அரிசி உணவு, மாதுளை முத்துக்கள் தூவிய தயிர்சாதம், ஐஸ்கீரிம், திராட்சை பழங்கள் உள்ளிட்டவை ஜெயலலிதா உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிப்பு பொருட்கள், பால் பொருட்கள் போன்ற உணவுகள் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படியும், ஜெயலலிதாவின் விருப்பப்படியும் வெவ்வேறு நாட்களில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பதிவு செய்துள்ள கருத்தில், ”ஜெயலலிதா உடல்நிலையை கருத்தில் கொண்டு சர்க்கரை உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் மேற்கண்ட உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உணவு வழங்கப்படாததால் ஜெயலலிதாவின் உடல்நிலை வேகமாக மோசமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா உட்பட 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரபரப்பு தகவல்கள் விசாரணை ஆணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

விளம்பரம்

Leave a Reply