
கணபதிராவின் தேர்தல் நடவடிக்கை மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது
143 total views, 1 views today
ரா.தங்கமணி
கிள்ளான் –
கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளராக களமிறங்கும் கணபதிராவ் வீரமனின் தேர்தல் நடவடிக்கை மையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
கிள்ளானில் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த தேர்தல் நடவடிக்கை மையத்தை ஜசெக துணைத் தலைவர் கோபிந்த் சிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த தேர்தல் நடவடிக்கை மையத்தின் வழி நாட்டின்ன் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் லியோங் துக் சீ, போர்ட்கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம், மீரா கட்சியின் தலைவர் கே.பி.சாமி உட்பட திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
