கணபதிராவுக்கு பெருகும் ஆதரவு

Malaysia, News, Politics

 116 total views,  1 views today

ரா.தங்கமணி

கிள்ளான் –

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள வீ.கணபதிராவுக்கு பல இன மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.


நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நம்பிக்கைக் கூட்டணி தமது வேட்பாளர்களை களமிறக்கி விட்டுள்ளது. அதன் அடிப்படையில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் கணபதிராவ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.


வேட்பாளராக தம்மை அறிவித்தது முதல் கிள்ளான் தொகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடி வரும் கணபதிராவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டேச் செல்கிறது.


அதோடு கிள்ளான் நாடாளிமன்றத் தொகுதி எப்போதும் ஜசெகவின் கோட்டையாக திகழும் நிலையில் ஜசெகவின் வேட்பாளரான கணபதிராவின் வெற்றி வாய்ப்பு இப்போதே பிரகாசமாக காணப்படுகிறது களத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வருகிறது.

Leave a Reply