கணபதிராவுடன் கருத்து வேறுபாடு கிடையாது- சார்ல்ஸ் சந்தியாகோ

Malaysia, News, Politics

 26 total views,  1 views today

ரா.தங்கமணி

கிள்ளான் –

நானும் கணபதிராவும் இணைந்தே பணியாற்றுகிறோம். எங்களுக்குள் எவ்வித பிரிவினையும் கிடையாது. தேர்தல் களத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஒன்றாகவே களம் காண்கிறோம் என்று கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக வீ.கணபதிராவ் களமிறக்கப்பட்டதால் தாம் சேர்ந்து பணியாற்றவில்லை என்ற தகவல் பரவுகிறது. இது முற்றுலும் தவறானது ஆகும்.

கணபதிராவுடன் இணைந்து தாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்பதற்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க கடமைப்பட்டுள்ளேன். அதன்  அடிப்படையில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்ற அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ  சொன்னார்.

சார்ல்ஸ் சந்தியாகோவின் ஆதரவை முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட கணபதிராவ் அவருக்கு நன்றி கூறினார்,

Leave a Reply