கணவன், மனைவி பந்தத்திலிருந்து பிரியும் சமந்தா, நாகசைதன்யா

India, News

 202 total views,  1 views today

தமிழ், தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் நடிகை சமந்தாவும் நடிகர் நாகசைதன்யாவும் கணவன், மனைவியாக இருப்பதில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளனர்.

சமந்தாவும் நாகசைதன்யாவும் பிரியப் போவதாக அண்மைய கால செய்திகள் பரவிக் கொண்டிருந்தன.

இந்நிலையில் தாங்கள்  பிரிவதாக இருவரும் ஒரே மாதிரியான  பதிவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.

அதில், நீண்ட ஆலோசனைக்கு பிறகு  கணவன், மனைவியா உள்ள நானும் சமந்தாவும் (நானும் நாகசைதன்யாவும்) பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக  நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான  நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், பத்திரிகை, மற்றும் ஊடகங்கள் எங்களின் தனிப்பட்ட விஷயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு இருவரும் பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply