கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மரணம்

India, News

 230 total views,  2 views today

பெங்களூரு-

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என ரசிகர்களால் புகழப்பட்ட புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.


உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக மயங்கி விழுந்த புனித் ராஜ்குமார், பெங்களூரிலுள்ள விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.


புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


46 வயதான புனித் ராஜ்குமார், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் கடைசி மகனாவார்.


புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு அரசியல்வாதிகளும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply