கம்போங் பெட்போர்ட் இடுகாட்டு துப்புரவுப் பணி

Malaysia, News

 116 total views,  1 views today

ரா.தங்கமணி

தஞ்சோங் சிப்பாட்-

100 ஆண்டுகள் பழைமையான கம்போங் பெட்போர்ட் இடுகாட்டை சுத்தம் செய்யும் நோக்கில் பெட்போர்ட் குடியிருப்பாளர் சமூகநல இயக்கம் துப்புரவுப் பணியை அண்மையில் மேற்கொண்டது.

இந்த இடுகாட்டை பராமரிக்கும் பொறுப்பை புதிய நிர்வாகம் மேற்கொண்டுள்ள நிலையில் இளைஞர்களின் முழு ஒத்துழைப்போடு இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது என்று நிர்வாகத் தலைவர் பத்மநாதன் தெரிவித்தார்.

இந்த புதிய நிர்வாகத்தின் கீழ் இடுகாட்டை பராமரிப்பதோடு இடுகாட்டில் நிலவும் குடிநீர் வசதி, மின்சார வசதி பிரச்சினைக்கு தீர்வு, தகன மேடை சீரமைப்பு, அரிசந்திரன் சன்னதி புதுப்பிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பிரச்சினைகள் குறித்து தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் பொர்ஹான்  பின் அமான் ஷா கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் விரைவில் ஆக்ககரமான நடவடிக்கைகள் முன்னெடுக்க துணை புரிவதாகவும் உறுதியளித்தகாவும் பத்மநாதன் கூறினார்.

புதிய நிர்வாகத்தின் கீழ் இளைஞர்கள் ஆதரவோடு கம்போங் பெட்போர்ட் இடுகாடு சீரமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

விளம்பரம்

Leave a Reply