கலிடோனியா பட்டாளிகளுக்கு புதிய வீடமைப்பு திட்டம்; பிறந்தது விடிவுகாலம்

Malaysia, News

 213 total views,  2 views today

டி.ஆர். ராஜா

பட்டர்வொர்த்-

பல ஆண்டுகாலமாக கலிடோனியா தோட்டத்திற்கு உழைத்து ஓடாய் தேய்ந்து போன கலிடோனியா மக்களின் உழைப்பை போற்றும் வகையில் இங்கு இத்தோட்ட  மக்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம் அமைக்கபடுகின்றது.

கலிடோனியா தோட்ட வீடமைப்புத் திட்டம் தாமான் கலிடோனியா இன்டா என்று உருமாற்றம் காணப்படவுள்ளது .

இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த நவம்பர் மாதம் 2020 நிறைவுற்ற நிலையில் அதன் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தின் மேம்பாட்டை நேரடியாகச் சென்று பார்வையிடுவதற்காக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி அவர்தம் குழுவினருடன் மேம்பாட்டு இடத்திற்கு இன்று காலை சென்றார்.

இந்த வருகையின் போது இக்கோ வேர்ல்டு மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்முறை அதிகாரி டத்தோஶ்ரீ சுந்தராஜு ,அவர்தம் குழுவினர் ,பொறுப்பாளர்கள் ,கலிடோனியா தோட்ட குடியிருப்பாளர் சங்கத் தலைவர் க.கெ.தியாகராஜன் ,பொறுப்பாளர்கள் என பலர்  உடனிருந்தனர் .

இங்கு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கிட வேண்டும் என்று முயற்சியில் பேராசிரியர் பி.இராமசாமி ஈடுபட்டார் . அதன் பயனாக மாநில அரசாங்கத்தின் துணையுடன் துணை நிறுவனமான இக்கோ ஹரிசன் நிறுவனத்துடன் இணைந்து கலிடோனியா தோட்ட மக்களுக்கான தாமான் கலிடோனியா இண்டா என்னும் வீடமைப்பு  திட்டம் கலிடோனியா தோட்ட தொழிலாளர்களுக்கான இத்திட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

இங்கு முதல் கட்டமாக நிர்மாணிக்கப்படும் 112 வீடுகளில் தங்களிடம் பதிந்துக் கொண்டுள்ள 80 குடியிருப்பாளர்களுக்கு முதலில் வழங்கப்படும். எஞ்சிய வீடுகள் ஏற்கனவே இங்கு வாழ்ந்து தற்போது வெளியிடங்களில் வசித்து வரும் கலிடோனியா முன்னாள் குடியிருபாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை தந்து வழங்கப்படும். முதல் கட்ட வீடமைப்பு திட்டங்கள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என்றும் இரண்டாம் கட்ட பணிகள் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கபடுகின்றது .

2018ஆம் ஆண்டு  இத்திட்டத்திற்கான இறுதி தீர்வு  காணப்பட்டது .இதன் வழி 15,106 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்நிலத்தில் முதல் கட்டமாக 112 வீடுகளும் இரண்டாம் கட்டமாக 160 வீடுகளும் என மொத்தம் 272 வீடுகளும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட பிரிவு ஏ கீழ் தலா 42 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான வீடுகள் கட்டபடும். அவை ஒவ்வொன்றும் 650 சதுரடி பரப்பளவைக் கொண்டிருக்கும் நிலத்தின் மதிப்பு உட்பட ஒவ்வொரு வீட்டின் கட்டுமான செலவும் தலா 1 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி என்று மதிப்பிடப்படுகின்றது .இந்த மேம்பாட்டில் இங்கு அமைந்துள்ள அருள்மிகு அன்னை மகா மாரியம்மன் தேவஸ்தானம் ஆலயம் மற்றும் நீண்ட காலமாக உள்ள பொது மண்படமும் சீரமைப்பு காணப்படவுள்ளது

அண்மைய காலமாக தொடர்ந்து வந்த கலிடோனியா தோட்டத்தின் வீடமைப்பு திட்டம் நிறைவு பெற்று தோட்டப் பட்டாளிகள் வாழ்வதற்கான காலம் கனிந்துவிட்டது .தோட்டத்திற்காக மாடாய் உழைத்த பட்டாளிகள் வாழ்வில் ஒரு திருப்பமாக இந்த வீடமைப்பு  திட்டம் அமைந்திக்கும் ,இங்கு வாழ்ந்த பட்டாளிகளும் வாழ்ந்து வரும் பாட்டாளிகளும் தங்களுக்கான  வீடுகளை பெற்று சுக வாழ்க்கை வாழ்வது தாம் கண்ட வெற்றியாக கருதுவதாக பேராசிரியர் இராமசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply