கலையுமா சிலாங்கூர், நெகிரி செம்பிலான் அரசு

Malaysia, News, Politics

 102 total views,  1 views today

ஷா ஆலம்-

மாநில சட்டமன்றத்தை கலைக்கும் முடிவை எடுத்துள்ள பினாங்கு மாநில அரசின் முடிவை அடுத்து பக்காத்தான் ஹராப்பான் வசமுள்ள சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநில அரசுகளும் கலைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் கடந்த 10ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி அறிவித்தார்.

இதையடுத்து தேமு ஆட்சி செலுத்தும் மாநில அரசுகள் கலைக்கப்படும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி அறிவித்தார்.

பொதுத் தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் தங்களது மாநில அரசுகளை கலைக்க மாட்டோம் என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இதற்கு முன் அறிவித்திருந்தது.

தற்போது திடீர் திருப்பமாக பினாங்கு மாநில அரசை கலைக்க முடிவு செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

பினாங்கு மாநில அரசு கலைக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

பினாங்கு மாநில அரசை கலைக்கும் முடிவில் மாற்றம் ஏற்படவில்லையெனில் அது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி புரியும் பிற மாநிலங்களான சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநில அரசுகளையும் கலைக்கும் நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசுகள் கலையுமா? இல்லையா? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

Leave a Reply