கல்வி அமைச்சு இடைநீக்கம் செய்தோரை அனுப்பி பெற்றோரின் புகாரை மீட்டுக் கொள்ள பேரம் பேசும் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் ? பெற்றொரின் புகாருக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்காததால் வந்த விளைவு ? – பொது ஊடகங்களை நாடும் பெற்றோர்

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools, Uncategorized

 323 total views,  1 views today

– குமரன் –

கோம்பாக் – 30 செப் 2022

இங்குள்ள தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியர் மீது பொய்ப் புகாரை மாணவி ஒருவரை மிரட்டி அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எழுத வைத்த அவரது அத்துமீறும் செயல்பாடு குறித்து அம்மாணவியின் பெற்றோர் கல்வி அமைச்சிடம் புகார் அளித்துள்ளார்.

ஒரு மாத காலம் ஆகியும் எந்தவிதமான நடவடிக்கையும் அவ்விவகாரம் தொட்டு கல்வி அமைச்சு எடுக்காத நிலையில் தற்போது இதனைப் பொது ஊடகங்களின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளார் அந்த மாணவியின் தாயார்.

முன்னதாக, இந்த அத்துமீறல் தொடர்பில் ஐ சேனல் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தப் புகார் தொடர்பில் கல்வி அமைச்சால் இடைநீக்கம் செய்யப்பட்ட அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் செயலவையினர் இருவரை அனுப்பி தமது புகாரை மீட்டுக் கொள்ளுமாறும் அதற்கு ஈடாக வீட்டிற்குத் தேவையானப் பொருட்களை வாங்கித் தருவதாகவும் பேரம் பேசியதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட அந்தத் தலைமை ஆசிரியர் மீது கல்வி அமைச்சும் அதிகாரப்பூர்வத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்காததன் விளைவே, தமது வீட்டைத் தேடி தேவையில்லாத நபர்கள் வருவதும் பேரும் பேசுவதுமாய் நடக்கின்றது எனவும் அந்தப்  பெற்றோர் குறிப்பிட்டார்.

அவரது புகாருக்குப் பிறகு, ஒரு கடிதத்தைப் பள்ளியில் இருந்து அவர் பெற்றதையும் தம்மைச் சந்திக்க அதில் அழைக்கப்பட்டிருந்ததையும் ஐ சேனல் பார்வைக்குக் கிடைத்துள்ளது. ஆனால், அந்தச் சந்திப்புக்கு மறுத்த அந்தப் பெற்றோர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் கல்வி அதிகாரி, பள்ளிக்கானக் காவல் துறை தொடர்பு அதிகாரி, தமது மகளின் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஆகியோருடன் தாம் கலந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

தமது விருப்பத்திற்கு அந்தத் தலைமை ஆசிரியை மாற்றி மாற்றி பேசுபவர் என்பதால், அவர் ஏற்பாடு செய்திருக்கும் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இல்லை என்பதால் மேற்குறிப்பிட்டவர்கள் வருகை அளிக்கப்பட்டு மாவட்டக் கல்வி அதிகாரி முன்னிலையில் எந்த விசாரனை வேண்டுமானாலும் செய்யப்பட தாம் ஒப்புதல் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார் அந்தப் பெற்றோர்.

தாம் அளித்தப் புகார் குறித்து கல்வி அமைச்சின் இந்த மெத்தனப் போக்கு கண்டிக்கத் தக்கது எனக் கூறும் அந்தப் பெற்றோர், கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமக்கும் தமது மகளுக்கும் நேர்ந்த அநீதி தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆசிரியர்களையும் மாணவர்களையும் இது போன்று நடத்தும் இந்தத் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாகப் பதவி இறக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் தமிழ்ப்பள்ளியில் இப்படி ஒருவர் தலைமை ஆசிரியையாக இருப்பது பல தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் மிகுந்த அவமதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது ஊடகங்கள் இந்த விவகாரத்தைத் தட்டி கேட்டு கல்வி அமைச்சரின் பார்வைக்குக் கொண்டு சென்று சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply