
கவலைக்குரிய நிலையில் இணைய மோசடி
478 total views, 1 views today
கோலாலம்பூர்-
இணைய மோசடி தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மலேசியாவில் கவலைக்குரிய பிரச்சினையாக அது உருவெடுத்துள்ளது என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார்.
இணைய வழி மிரட்டல், மோசடி, இணைய ஊடுருவல், தரவு திருட்டு, மின்னஞ்சல் மோசடி தொடர்பான எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 2019இல் வெ.539 மில்லியன் இழப்புகளை உள்ளடக்கிய 13,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இது 2020இல் 17,000 புகார்களாக பதிவானது.
கடந்தாண்டு இப்புகார்களின் எண்ணிக்கை 20,000-ஆக அதிகரித்து வெ.560 மில்லியன் இழப்புகளை சந்தித்தது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 3,273 புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் வெ.114 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.