காடேக் யார் வசம்?

Malaysia, News, Politics

 187 total views,  3 views today

மலாக்கா-

மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. 28 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மலாக்கா மாநில  தேர்தலில் மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியில் குதித்துள்ளனர்.

இத்தேர்தலில் மத்திய அரசை பிரதிநிதிக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் பாரிசான் நேஷனல் கூட்டணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. எப்போதுமே மத்திய அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் எதிர்க்கட்சியுடனே மோதிக் கொள்ளும் நிலையில் மலாக்கா மாநில தேர்தல் புதிய சரித்திரத்தை எழுதியுள்ளது.

இந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் புதியவர்களுக்கும் இளையவர்களுக்கும் வாய்ப்புகள்  வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்காத்தான் ஹராப்பானின் இந்த வியூகம் மாநில ஆட்சியை கைப்பற்றுவதற்கு சாதகமாக அமையுமா? என்பதே கேள்விக்குறிதான்.

இந்த தேர்தலில் மஇகா ஒரேயொரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது. தேமு வேட்பாளராக மஇகாவின் வி.பி.சண்முகம் காடேக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜசெகவின் சாமிநாதன் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் காடேக் தொகுதியில் தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

சண்முகத்திற்கு ஆதரவாக ம இகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உட்பட மஇகாவினரும் இதர தோழமைக் கட்சிகளும் பிரச்சாரம்  முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சாமிநாதனுக்கு பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் காடேக் தொகுதியில் யார் வெற்றி வெறுவர்? சட்டமன்ற உறுப்பினராக யார் தேர்வு பெறுவர் என்ற கணிப்புகளும் வலுபெறத் தொடங்கியுள்ளன.

செய்தியை வீடியோ வடிவில் காண:

Leave a Reply