காடேக் தொகுதியில் 6 முனைப் போட்டி

Malaysia, News, Politics

 156 total views,  1 views today

அலோர்காஜா, நவ.9-

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் வி.பி.சண்முகம் போட்டியிடும் காடேக் சட்டமன்றத் தொகுதியில் ஆறு முனைப் போட்டி நிலவுகிறது.

அலோர்காஜா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட காடேக் சட்டமன்றத் தொகுதி மட்டுமே மஇகா போட்டியிடும் தொகுதி.

இங்கு வி.பி.சண்முகத்தை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் ஜசெகவின் ஜி.சாமிநாதன், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த முகமட் அமிர் ஃபிட்ரி, புத்ரா கட்சி சார்பில் லைலா நோரிண்டா ஆகியோர் போட்டியிடும் வேளையில் சுயேட்சை வேட்பாளர்களாக அஸாஃபென் அமின், மோகன் சிங் ஆகியோர் களத்தில் குதிக்கின்றனர்.

Leave a Reply