[காணொலி] செய்தித் துளிகள் – 27-11-2022

Malaysia, News, Opinion, Politics

 141 total views,  1 views today

– குமரன் –

கிளாந்தான் – கிளாந்தான் மாநிலத்தில் சட்டத்திற்குப் புறம்பான வன விலங்கு வேட்டையாடலையும் மரங்களை வெட்டும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த ஆயுதப் படை உதவியை நாடுகிறார் அம்மாநில முதல்வர் டத்தோ அகமாட் யாக்கோப். காட்டைக் காப்பது ஆயுதப்படையினரின் வேலை இல்லை என்றாலும் இது போன்ற உதவிகளைச் செய்யலாம் என்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற உதவியை நாடியதாகவும் அவர் சொன்னார்.

குவாந்தான் – தற்காப்பு அமைச்சரையும் துணை அமைச்சரையும் நியமிக்கும் போது தேர்தலில் வெற்றி பெற்ற ஆயுதப்படையில் பணி புரிந்தவரை நியமிக்க வேண்டும் என ஆயுதல்லடை  முன்னாள் பணியாளர் சங்கம் பிரதமர் அன்வார் இபுராகிமைக் கேட்டுக் கொண்டது.

புத்ராஜெயா – சந்தையில் தற்போது தேவையான அளவு முட்டை இருப்பதாகவும் தட்டுப்பாடு ஏற்படாமல் கவனித்துக் கொண்டு செயல்பட்ட அத்துறையைச் சார்ந்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார் பிரதமர் அன்வார் இபுராகிம்.

ஷா ஆலாம் – பிரதமர் அன்வார் இபுராகிம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசிய முன்னணி ஆதரவு தெரிவிக்க இருப்பதாக அதன் தலைவரனகமாட் ஸாஹிட் ஹமிடி சொன்னார். மாமன்னரின் ஆணைக்குக் கட்டுப்பாட்டு மக்களாட்சி முறையை நிலை நாட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

பினாங்கு – அடையாள ஆவணங்கள் இல்லாத 6 மியான்மார் நாட்டவரை கெண்டி தீவின் அருகே மலேசிய கடற்படை தடுத்து வைத்தது. \

பாசீர் கூடாங் – பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் தலைமை ஏற்கும் அமைச்சரவையில் நீதிமன்ற வழக்கு கொண்டுள்ளவர்களை இடம்பெறச் செய்வதில் இருந்து தவிர்த்து விட வேண்டும் என பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம் கேட்டுக் கொண்டார்.

அலோர் ஸ்டார் – திசம்பர் 7 ஆம் நாள் நடக்கவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை முன்னிட்டு கெடா மாநிலத்தில் விடுமுறை இல்லை என அம்மாநில முதல் முகம்மட் சனுசி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கிள்ளான் – மலேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்க விட்டது மட்டும் இல்லாமல் அவ்வாறு செய்தது தவறு எனச் சுட்டிக் காட்டிய அண்டை அயலாரிடம் தகராறு செய்த வங்காளதேசியைக் காவல் துறை தடுத்து வைத்தது.

கோலாலம்பூர் – ஜோகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இபுராகிமும் பிரதமர் அன்வார் இபுராகிமும் இன்று கோலாலம்பூரில் சந்தித்துக் கொண்டனர்.

ஷா ஆலாம் – பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் ஒருமைப்பாட்டு அமைச்சராகப் பதவி வகிக்க வேண்டும் எனவும் அனைத்து இனப் பிள்ளைகளும் தமது பிள்ளைகளே என பிரதமர் அடிக்கடி கூறும் அவது தன்மைக்கு மிகப்  பொருத்தமானதாக இருக்கும் எனவும் தான் ஶ்ரீ லி லாம் தை கருத்துரைத்தார்.

திரங்கானு – உயிர்களைக் காக்க 17,000 பைகள் குருதியைப் பொதுமக்கள் திரங்கானுவுக்கு வழங்கி இருப்பதாக சுல்தானா நுர் ஸஹிரா மருத்துவமனையின் குருதிப் பிரிவின் தலைவர் டாக்டர் முகம்மட் முகைமின் கம்பாலி தெரிவித்தார்.

பகாங் – பகாங் மாநில முதல்வராக டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் நியமிக்கப்பட்டார்.

கிளாந்தான் – கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை கிளாந்தான் மாநில சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

Leave a Reply