காலதாமதம் செய்யாமல் மக்களவை கலைக்கப்பட வேண்டும்- நஜிப்

Malaysia, News, Politics

 349 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தாமதமானால் தேசிய முன்னணி மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலின்போது வரலாற்றில் முதல் முறையாக தேசிய முன்னணி தோல்வியை சந்தித்தது.

சில அழுத்தங்களின் காரணமாக தேர்தல் நடத்தப்படுவது ஒத்திவைக்கப்படலாம். ஆனால் சூழ்நிலை மாறினால் அது ஆபத்தில் முடியும்.

15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை அரசாங்கம் இனியும் ஒத்தி வைக்ககூடாது. சில தனிப்பட்ட நலன்களுக்காக அதனை ஒரு காரணமாக பயன்படுத்தக்கூடாது என்று தேசிய முன்னணியின் 48ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.

Leave a Reply