கிளந்தான், திரெங்கானுவில் வெள்ள அபாயம்

Uncategorized

 123 total views,  1 views today

கோலத்திரெங்கானு-

கடுமையான வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ள கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,557 என உயர் வு கண்டிருக்கிறது.
திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வரை 931 குடும்பங்களைச் சேர்ந்த 3,334 பேர் என இருந்த நிலையில் இன்று காலை அவ்வெண்ணிக்கை 1,287 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேர் என உயர்வு கண்டுள்ளது.
அதேபோன்று கிளந்தானிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வரை 881 குடும்பங்களைச் சேர்ந்த 2,993 பேர் என இருந்த நிலையில் இன்று காலை அவ்வெண்ணிக்கை 1,034 குடும்பங்களைச் சேர்ந்த 3,222 பேர் என உயர்வு கண்டுள்ளது.

Leave a Reply