கிளாந்தான் சட்டமன்றம் கலைக்கப்படாது !

Malaysia, News, Politics, Polls, Uncategorized

 110 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 10/10/2022

நாட்டின் 15 வது பொதுத் தேர்தலோடு கிளாந்தான் மாநிலத் தேர்தலை நடத்த அம்மாநிலத்தின் சட்டமன்றம் கலைக்கப்படாது என அம்மாநிலத்தின் துணை முதல்வர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகப் பிரதமர் அறிவித்திருந்தாலும் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படாது எனும் கிளாந்தானை ஆளும் கட்சியான பாஸ் முடிவெடுத்திருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

பாஸ் ஆட்சி செய்யும் கெடா, கிளாந்தான், திரங்கானு ஆகிய மூன்று மாநிலங்களும் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை தங்களின் சட்டமன்றத்தைக் கலைக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றம் – சட்டமன்றம் , இவற்றின் தேர்தல்கள் இரு வேறு நாட்களில் சில மாத கால இடைவெளியில் நடத்தப்படுவதாலும் மழைக்காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதாலும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதா எனும் கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், பிரதமர் சார்ந்திருக்கும் கட்சியின் நெருக்கடியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகட் தமது புரிதல் இருப்பதாக அவர் சொன்னார்.

Leave a Reply