கிள்ளானில் இன்று சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம்

Malaysia, News, Politics

 124 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

இந்துக்களின் பெருவிழா கொண்டாட்டமான தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று 22ஆம் தேதி சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்படவுள்ளது.

இன்றிரவு 7.30 மணிக்கு கிள்ளான், தெங்கு கிளானாவில் கலை நிகழ்ச்சியுடன் கூடிய தீபாவளி விருந்துபசரிப்பு நடத்தப்படவுள்ளது.

இவ்விழாவில் மாநில பட்ட த்து இளவரசர் தெங்கு அமிர் ஷா, மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கணபதிராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply