கிள்ளானில் களமிறங்குகிறார் கணபதிராவ்

Malaysia, News, Politics

 85 total views,  1 views today

கோலாலம்பூர்-

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஜசெகவின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் இதனை அறிவித்தார்.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கணபதிராவ் இம்முறை நாடாளுமன்றத் தொகுதிக்கு களமிறக்கப்படுகிறார்.

கணபதிராவ் இதற்கு முன் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply