குடும்பத்தினருடனான இடைவெளியை சிறைத் தண்டனை அதிகப்படுத்தியுள்ளது ! – நஜிப் வேதனை

Crime, Malaysia, News, Politics

 251 total views,  1 views today

கோலாலம்பூர் – 25 ஆகஸ்டு 2022

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன ஊழல் வழக்கு விவகாரத்தில் 12 ஆண்டுகால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்னதாக தனது குடும்பத்தினருக்கு குறிப்பு எழுதியுள்ளார்.

1976 முதல் அரசியலிலுமு அரசாங்கப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால் குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை செலவிட முடியவில்லை.

இப்போதைய சிறைத் தண்டனை குடும்பத்தினரிடனான இடைவெளியை மேலும் அதிகப்படுத்திவிட்டது.

எனினும் நிலைமை மாறும். உலகத்தில் நாம் தற்காலிகமாகத்தான் வாழ்கிறோம். நாம் மீண்டும் அடுத்த உலகத்தில் மகிழ்ச்சியாக இருப்போம் என்று டத்தோஸ்ரீ நஜிப் தனது குடும்பத்தினருக்கு குறிப்பு எழுதியுள்ளார்.

Leave a Reply