கூட்டரசு அரசியலமைப்பின் 10ஆவது பிரிவு திருத்தம்- அரசாங்கமும் பிஎச் கூட்டணியும் உடன்பாடு

Malaysia, News, Politics

 103 total views,  1 views today

கோலாலம்பூர்-

 பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்கான தடையின் விளக்கத்தை செம்மைப்படுத்துவது உட்பட, கூட்டரசு அரசியலமைப்பின் 10ஆவது பிரிவு திருத்தம் தொடர்பான மூன்று கூறுகளில் அரசாங்கமும் நம்பிக்கை கூட்டணியும் உடன்பட்டுள்ளன.

கூட்டரசு அரசியலமைப்பின் 48 (6)ஆவது பிரிவை ரத்து செய்வதற்கான முன்மொழிவுக்கும், கூட்டரசு அரசியலமைப்பில் வேறு ஏதேனும் திருத்தங்கள் தேவை என்று கருதப்படுவதற்கும் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ வான் ஜுனாய்டி துவாங்கு ஜபார் தெரிவித்தார்.

மக்களவை உறுப்பினர்கள் கட்சி தாவுவதை தடைசெய்வது தொடர்பில் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கும் இந்தத் திருத்தம் அதிகாரம் வழங்குகிறது.

மக்களவை உறுப்பினர் ஒருவர் தனது பதவியைத் துறக்கும்போது, அவர் உறுப்பினர் பதவியை துறந்த நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு, மக்களவை உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று பிரிவு 48 (6) கூறுகின்றது.

மேலும், மக்களவையில் உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடை செய்வது தொடர்பான மசோதாவை இயற்றுவது, இந்த விவகாரம் அவையால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவில் விவாதம் மற்றும் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்படும்” என்று அவர் அரசியலமைப்பு (திருத்தம்) மசோதாவைத் தாக்கல் செய்யும்போது அவர் கூறினார்.

Leave a Reply