
கெடாவில் 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேமு இலக்கு : மனக் கோட்டை கட்ட வேண்டாம் ! – சனுசி முகம்மட்
201 total views, 1 views today
– குமரன் –
சுங்கை பட்டாணி – 20/10/2022
கெடா மாநிலத்தின் 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் 10 தொகுதிகளை தேசிய முன்னணி வெற்றி கொள்ள இலக்கு கொண்டிருப்பதாக அதன் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருந்தார். அவ்வாறான மனக் கோட்டை கட்ட வேண்டாம் என கெடா மாநில முதல்வர் சனுசி முகம்மட் பதிலடி கொடுத்துள்ளார்.
கெடா மாநிலத்தை மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி செய்ய அதன் மக்கள் விரும்பவில்லை என பாஸ் கட்சியைச் சேர்ந்த சனுசி குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் கெடாவில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை வெற்றி கொண்டிருந்த தேசிய முன்னணிக்கு அந்த 10 தொகுதிகளின் நியாயமான குறிக்கோள் என ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, கெடா மாநில அம்னோவின் குறிக்கோள் வேறு வகையாக இருப்பதாகக் கூறிய சனுசி, கோலாலம்பூரில் அமர்ந்து கொண்டு 10 நாடாளுமன்றத் தொகுதிகளை இங்கு குறீ வைக்கிறார் ஸாஹிட் என்றார”.
ஆனால், கெடாவில் இருக்கும் அம்மாநில அம்னோவின் துணைத் தலைவர் ஓத்மான் அஸிஸ் கூறுகயில், 8 நாடாளுமன்றத் தொகுதிகளே எனக் கூறுவதாக சனிசி சுட்டிக் காட்டினார்.
உண்மையான நம்பிக்கையின் நிலைக்கும் மனக்கோட்டைக்குமான வேறுபாடு இருப்பதாகக் ஊறிய சனுசி, அம்னோவின் மனக்கோட்டை ஈடேறாது என்றார்.