கெ அடிலானை எதிர்த்து மூடா; ஏமாற்றத்தில் அன்வார்

Uncategorized

 124 total views,  1 views today

ஜோகூர்பாரு-

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சியை எதிர்த்து மூடா கட்சி தனது வேட்பாளரை களமிறக்கியுள்ள சம்பவம் தொடர்பில் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
தொகுதி பங்கீடு தொடர்பான சந்திப்பில் பிகேஆர் கட்சிக்கும் பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகளுக்கும் இடையே எவ்வித பிரச்சினையும் எழவில்லை. இந்த முடிவு ஒற்றுமை உணர்வில் எடுக்கப்பட்டது.
பிஎச் உடன் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதிவரை தோழமை உணர்வை கடைப்பிடிக்கிறோம். ஆனால் அது லார்க்கினில் நடக்கவில்லை. இது நிச்சயம் வருத்தமாக உள்ளது என்று ஒரு கூட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.
6 முனைப் போட்டியை எதிர்கொண்டுள்ள லார்க்கின் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் டாக்டர் ஸாமில் நஹ்வா அர்பின், மூடா சார்பில் ரஷிட் அபு பக்கார், தேமு சார்பில் ஹைரி முகமட் ஷா, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் ஸுல்கிப்ளி புஜாங், பெஜுவான்ம்க் சார்பில் முகம்ர் ரியாட்ஸ் முகமட் ஹஷிம், சுயேட்சை வேட்பாளராக நோராமாடான் புவான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply