கேசவனின் வாக்குகளை பிரிக்கும் இந்திராணி ?

Malaysia, News, Politics, Polls

 72 total views,  1 views today

இரா. தங்கமணி

சுங்கை சிப்புட் – 8/11/2022

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி நிலவும் நிலையில் பக்காத்தான் ஹராப்பானின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ்.கேசவனுக்கு பல பரீட்சை ஏற்படுத்தும் வகையில் சுயேட்சை வேட்பாளர் திருமதி இந்திராணி களமிறங்கியுள்ளார்.

கேசவனின் முன்னாள் உதவியாளரும் பிகேஆர் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான இந்திராணி கேசவன் மீது போலீஸ் புகாரும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இயக்கத்தின் வழி இங்கு சேவையாற்றியுள்ள இந்திராணி தமக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக எண்ணி பிகேஆரில் சீட் கேட்டார்.

அது எதுவும் நடக்காத நிலையில் தற்போது சுயேட்சையாக இந்திராணி களமிறங்கியுள்ளதால் கேசவனின் ஆதரவு வாக்குகளை அவர் பிரிப்பார் என்று நம்பப்படுகிறது.

எதிர்க்கட்சிக்கான வாக்குகள் சிதறும் பட்சத்தில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு வாய்ப்பு பிரகாசமா உள்ளதாக அறியப்படுகிறது.

Leave a Reply